இலங்கையில் பல வாரங்களின் பின்னர் நேற்று (18) முதன்முறையாக 700க்கும் குறைவான கோவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நேற்று 695 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை 579,134 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக நேற்று, 343 நபர்கள் கோவிட்-19 இலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 547,182 ஆக உயர்ந்தது.
17,218 பேர் தற்போது நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இலங்கையில் மேலும் 14 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, இது இறப்பு எண்ணிக்கை 14,734 ஆக அதிகரித்துள்ளது.