நெருக்கடிகளைச் சமாளிக்க நிதியுதவி கிடைக்கும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். இடமாற்றம், ஊர்மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
விரோதிகள் விலகும் நாள். விரும்பிய காரியம் விரும்பிய படியே முடியும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் ஏற்படும். எதிர்பாராத தனலாபம் உண்டு.
தொட்டகாரியம் வெற்றி பெறும் நாள். தொழில் முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வீடு வாங்கும் முயற்சி பலன் தரும். வருமானம் திருப்தி தரும்.
அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். ஆதரவுக்கரம் நீட்ட உறவினர் முன்வருவர். அடுத்த வரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று மகிழச்சியைத் தரும். மனக்கசப்புகள் மாறும்.
காரிய வெற்றிக்கு கலந்து ஆலோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவது நல்லது. உடல் நலனில் அச்சுறுத்தல் தோன்றும்.
இனிமையான நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். திருமண வாய்ப்புகள் கைகூடி வரலாம். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்துதவ முன்வருவர்.
சவால்களை சமாளிக்கும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். பெண் வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்தி யுண்டு. உத்யோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.
காலை நேரத்திலேயே கலகலப் பான செய்திகள் வந்து சேரும் நாள். வருமானம் இருமடங்காகும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும்.
புதியபாதை புலப்படும் நாள். பூமி யோகம் உண்டு. வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும்.
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். ஏட்டிக்கு போட்டியாக செயல்பட்ட உடன்பிறப்புகள் உங் கள் குணமறிந்து நடந்து கொள்வர். நீண்ட நாளைய பிரச்சினையொன்று சுமுகமாக முடியும்.
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பொருளா தார முன்னேற்றம் ஏற்படும். பிறருக் காக பொறுப்புச் சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும்.
வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும் நாள். ஆரோக்யம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்