நைஜீரியாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர், நபர் ஒருவர் மீது பண மழையை பொழிந்த வீடியோ வெளியாகி விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் பிறந்தவர் Adebayo Adeleke என்கிற BRed.நைஜீரியாவை பூர்வீகமாக கொண்ட இவர் அங்கேயே குடியேறினார். தற்போது பிரபல பாடகராக உள்ள BRed பெரும் கோடீஸ்வரர் ஆவார்.
இந்த நிலையில் BRed பணம் தொடர்பான செய்த ஒரு செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி நிகழ்ச்சி ஒன்றில் பாடிய BRed பணம் ஒரு காகிதம் என கூறியவாறு ரசிகர் ஒருவர் மீது பணத்தை வாரி இறைத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது, இதையடுத்து BRedன் செயலை பலரும் விமர்சித்துள்ளனர்.
ஒருவரின் பதிவில், உங்களுக்கு அது காகிதம் தான், ஆனால் எல்லோருக்கும் அந்த காகிதம் கிடைப்பதில்லை என பதிவிட்டுள்ளார்.
இன்னொருவரின் பதிவில், அந்த காகிதம் தான் உங்கள் வாழ்வை மாற்றி, நீங்கள் சொகுசாக வாழ உதவி செய்கிறது என பதிவிட்டுள்ளார்.
இப்படி பணத்தை தூக்கி எறிவது நியாயமா என பலரும் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.