பிரித்தானியாவில் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் சகோதரியின் மைத்துனரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவத்தில் 29 வயது நபரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேற்கு யார்க்ஷயர் பகுதியில் 2019 ஆகஸ்டு மாதம் சாம்பல் நிற Fiat Punto கார் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு சென்ற பொலிசார், இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
உடற்கூராய்வில் அந்த இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது உறுதியானது. சடலமாக மீட்கப்பட்டவர் 19 வயது Najeebullah Nekzad என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது சகோதரர் Nasrullah Nekzad என்பவரை கொலை வழக்கு தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விசாரணைக்கு பின்னர் Nasrullah Nekzad சொந்த ஊரான ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் சென்றார்.
இந்த நிலையிலேயே 29 வயதான Gol Zazai என்பவர் மீது பொலிசாரின் சந்தேகம் திரும்பியது. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், Gol Zazai மற்றும் Nasrullah Nekzad ஆகிய இருவருமே Najeebullah-ஐ கொலை செய்துள்ளது உறுதியானது.
Gol Zazai என்பவரின் சகோதரியையே Nasrullah திருமணம் செய்துகொண்டுள்ளார். மேலும் முன்விரோதம் காரணமாகவே Najeebullah கொல்லப்பட்டு உடலை கைவிடப்பட்ட காரில் மறைவு செய்துள்ளனர்.
ஆனால் கொலையின் பின்னணி தொடர்பில் தற்போது தலைமறைவாகியிருக்கும் Nasrullah இடம் விசாரணை முன்னெடுக்க வேண்டும் என பொலிசார் தெரிவிக்கின்றனர். மேலும், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது தொடர்பில் தமக்கு எதுவும் நினைவில்லை என்றே இதுவரை Gol Zazai கூறி வருகிறார்.
தற்போது Gol Zazai மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், அவருக்கான தண்டனை விபரம் மார்ச் மாதம் 6ம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.