உங்கள் குழந்தையின் உடல் மற்றும் மன ரீதியான நலத்திற்கு நல்ல தூக்கம் இன்றியமையாதது.
புதுமையான வழிமுறைகளைப் பயன்படுத்தி குழந்தைகளை தூங்க வைப்பது விளையாட்டாகவும், ஆர்வமூட்டுவதாகவும் இருக்கும். இது போன்ற சூழல்களை நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவும் சில வழிமுறைகளை பார்க்கலாம்,
இது உங்கள் குழந்தையை ஒவ்வொரு நாளும் சரியான நேரத்திற்கு தூங்கப் பழக்கும் வழிமுறையாதலால், அவர்கள் தூங்குவதற்கு எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தூக்கம் தங்கள் வாழ்வின் ஒரு பகுதி என்று அவர்களை உணரச் செய்ய முடியும்.
இரவு உணவு சாப்பிடாமல் உங்கள் குழந்தையை படுக்கைக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டாம். ஏனெனில், அர்த்த இராத்திரியில் ‘அம்மா, பசிக்குது’ என்று அவர் அடிக்கடி எழுந்து விடுவார். அது போன்ற நேரங்களில் உணவு கொடுத்தால், அன்றைய தூக்கம் கோவிந்தா! எனவே, உங்கள் குழந்தைக்கு நல்ல இரவு உணவை கொடுத்து பின்னர் தூங்கச் செய்யுங்கள்.
ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும். முகத்தை கழுவுதல், துணியை மாற்றுதல், பல் விளக்குதல் அல்லது வெளியே சென்று வருதல் ஆகிய பழக்கங்கள் நல்லது. படுக்கைளில் அவ்வப்போது செய்ய வேண்டிய ஆரோக்கியமான பழக்கங்களைப் பற்றி அவர்கள் அறியச் சொல்லிக் கொடுப்பதும் மிகவும் முக்கியமான பழக்கமாகும்.
நீங்கள் படிப்பதையெல்லாம் உங்கள் குழந்தை புரிந்து கொள்வாள் என்று நினைக்காதீர்கள். கதைகளை வாசித்துக் காட்டி அவளை தூங்கச் செய்வதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு கதை சொல்லிக் கொண்டே படுக்கையில் தூங்குவதற்கான டிப்ஸ்களை அவர்களுக்கு கொடுத்து வந்தால், அவர்கள் வசதியாக தூங்க முடியும்.
உங்கள் மகனுக்கு ‘குட் நைட்’ சொல்வதன் மூலம் இது தூங்குவதற்கான நேரம் என்பதை அவன் அறியச் செய்ய முடியும். இதன் மூலம் உங்கள் குழந்தை தூங்கத் தயாராக முடியும். சில நேரங்களில் அவரை முத்தமிட்டோ அல்லது அணைத்துக் கொண்டே கூட குட் நைட் சொல்லலாம்.