Loading...
பாண்டிராஜ் இயக்கத்தில் விமல்-சிவகார்த்திகேயன் இணைந்து `கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து, விமல்-சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து விமல் நடித்த `மாப்ள சிங்கம்’ படத்தில் ஒரு பாடலை பாடினார்.
இந்நிலையில், விமல் தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் `மன்னர் வகையறா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விமலுடன் கயல் ஆனந்தி, சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
Loading...
`துருவங்கள் பதினாறு’ படத்திற்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இந்நிலையில், `மன்னர் வகையறா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாட உள்ளதாக கூறப்படுகிறது.
Loading...