உத்தரப்பிரதேசம் மாநிலம் பிராதாப்கார் மாவட்டத்தில் உள்ள பட்டி என்ற கிராமத்தைத் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் தான் வளர்க்கும் ஆடுகளை மேய்ப்பதற்காக அப்பகுதியில் உள்ள காட்டுக்கு நேற்று சென்றுள்ளார்.
அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 4 மர்ம நபர்கள், இளம்பெண்ணை மடக்கி கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், அவ்விடத்தை விட்டு மர்ப நபர்கள் தப்பிச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் வீடு திரும்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். உடனே, அவர்கள் போலீசிடம் சென்று புகாரளித்தனர்.
புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.