நேற்று 524 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 580,209 ஆக உயர்ந்துள்ளது.
அனைத்து தொற்றாளர்களும் புத்தாண்டு கோவிட்-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் 7,817 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, கோவிட்-19 இலிருந்து குணமடைந்த 295 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 557,561 ஆக உயர்ந்தது.
தொற்று சந்தேகத்தில் 1,940 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 19 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் இலங்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 14,771 ஆக அதிகரித்துள்ளது.