அதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் மகாராஷ்டிரா, டெல்லி மாநிலத்தில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் மைக்ரோன் பாதிப்பு 200 ஐ தொட்டுவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சற்றுமுன்பு தகவல் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 54 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தலைநகர் டெல்லியில் 54 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேபோல் கர்நாடக மாநிலத்தில் 19 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 200 பேருக்கு மைக்ரான் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எழுபத்தி ஏழு பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.