இங்கிலாந்தில் 45 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இவர்களில் சிலர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 28 நாட்களில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 12,133 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க அங்கு கொரோனா தொற்றும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்று அங்கு புதிதாக 82,886 பேருககு கொரோனா தொற்று உறுதியானது.
மேலும் 45 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இவர்களில் சிலர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 28 நாட்களில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா மற்றும் அதன் புதிய வகையான ஒமைக்ரான் இரண்டுமே தீவிரமாக பரவி வருவதால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அந்த நாட்டின் மந்திரி சபை நேற்று அவசரமாக கூடி ஆலோசித்தது.