வேர்க்கடலை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு உணவுப்பொருள் ஆகும். நிலக்கடலையில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், மற்றும் தாது உப்புக்கள்,கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து நிறைந்துள்ளன.
பல ஆரோக்கிய பிரச்சினைகளை தீரக்க உதவுகின்றது. இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்வது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படும்.
தற்போது வேர்க்கடலையை அதிகமாக எடுத்து கொண்டால் ஏற்படும் பக்கிவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
வேர்க்கடலையில் அதிக கலோரி உள்ளடக்கம் உள்ளது. இதனை அதிக அளவு எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் பிரச்சனை ஏற்படும் வாப்பு உள்ளது.
அதிக அளவு நிறைவுறா கொழுப்புகள் எடுத்துக் கொள்வது பக்கவாதம், மாரடைப்பு, செரிமானப் பிரச்சனைகள் மற்றும் பிற உடல்நல சிக்கல்கள் ஏற்படுவதற்கு இவை வழிவகுக்கும்.
வேர்க்கடலையில் உள்ள பைடிக் அமிலம் இரும்புச் சத்து, துத்தநாகம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களை உங்கள் உடல் உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதனால் உங்களுக்கு தாது குறைபாடுகள், குடல் குழாயில் எரிச்சல் மற்றும் அலர்ஜி போன்றவை ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்க செய்யும்.
வேர்க்கடலையுடன் உப்பினை சேர்த்து சாப்பிடும்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
வேர்க்கடலையில் அதிக அளவு ஒமேகா 6 உள்ளது. இந்த அத்தியாவசிய நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருந்தால் அவை உங்கள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்த செய்யலாம்.