ஒவ்வொரு தீண்டுதளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. ஒரே தீண்டல் சூழ்நிலை சார்ந்து வேறுப்பட்டும் பிரதிபலிக்கும்.
சில தீண்டல் காதலை வெளிப்படுத்தும், சில தீண்டல் காமத்தை வெளிப்படுத்தும், சில தீண்டல் அன்பும், அரவணைப்பையும் வெளிப்படுத்தும்.
இதில், ஒரு ஆண் பெண்ணின் கால்களை தீண்டும் போது ஒரு ஆணின் மனதில் எழும் எண்ணம் என்ன? அது சூழ்நிலை சார்ந்து எப்படி மாறுபடுகிறது என்பது குறித்து இங்கு காணலாம்…
ஃப்ளர்ட் ஜெப் எனும் நபர், ஒரு பெண்ணின் கால்களை தொடுவது ஃப்ளர்ட் செய்வதன் ஆரம்ப புள்ளி என கூறியுள்ளார்.
முத்தத்திற்கான முதல் படி
மற்றுமொரு ஆண், பெண்ணின் கால்களில் கை வைப்பது, முத்தத்திற்கு முந்தைய படி என்றும். இது முத்தத்தை காட்டிலும் சிறிதளவிலான ரொமான்ஸ் லெவல் என்றும் கூறியுள்ளார்.
உரிமை, அதிகாரம்
ஒரு ஆண் தைரியமாக ஒரு பெண்ணின் கால்களை தொடுகிறான் என்றால், அவனுக்கு அந்த பெண்ணிடம் அவ்வளவு உரிமை, அதிகாரம் இருக்கிறது / அந்த பெண் அந்த ஆணுக்கு அவ்வளவு உரிமை அதிகாரம் அளித்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது என கூறியுள்ளார்.
பாதுகாப்பு
ஒருவர், “பெண்களின் கால்களை தொடுவது அவர்களை பாதுகாப்பாக உணர செய்வது ஆகும். இது இச்சை எண்ணத்தின் பால் வெளிப்படும் செயல் அல்ல. ஒரு ஆண் பெண்ணின் காலை தொடுகிறான் எனில், அவன் அவளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முயல்கிறான் என்றே அர்த்தம்” என கூறியுள்ளார்.
சூழலை சார்ந்தது…
ஒரு ஆண், பெண்ணின் கால்களை தொடுவதற்கு பல காரணம் இருக்கிறது. அது அந்தந்த சூழலை சார்ந்தது. அது ரொமான்ஸாகக இருக்கலாம், பாதுகாப்பாக இருக்கலாம், அரவணைப்பாக இருக்கலாம்.
பெண்ணின் நிலை…
ஆண் ஒருவர் பெண்ணின் கால்களை தொடுவது ஒருபுறம் இருந்தாலும், அதற்கு அந்த பெண் எப்படி ரியாக்ஷன் செய்கிறார் என்பது தான் சூழலை உருவாக்குகிறது என ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.