இறுதிக்கட்ட போரின் போர்க்குற்ற நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர் என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டுப் பேர் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ள அவர்களை தராதரம் பராமல் தண்டிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இராணுவத்தின் ஒழுக்கம் இழக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, பொன்சேகா கடுமையாக சாடியுள்ளார்.
இலங்கையில் பலமான 200,000 இராணுவத்தினர் உள்ளதாகவும், அவர்களில் 7 அல்லது 8 பேர் போர் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பு கூற வேண்டும். போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றம் புரிந்தவர்கள் அனைத்து நாட்டு இராணுவத்திலும் உள்ளனர் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.