கேரளாவில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான சவூதி ரியால்களை வாழைப்பழங்களுள் வைத்து கடத்த முயன்ற டுபாய் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
வருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்குக் கிடைத்த தொலைபேசித் தகவல் ஒன்றின் பேரில், கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது டுபாய் பிரஜைகள் இருவர் வாழைப்பழங்களை பயணப் பொதிக்குள் வைத்து எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பயணப்பொதியில் இருந்த வாழைப்பழங்களை சோதனையிட்ட அதிகாரிகள், பழங்களின் நடுவே ரியால் நாணயத் தாள்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். குறித்த பழத் தொகுதியில் இருந்து மட்டும், இந்திய மதிப்பில் சுமார் 46 இலட்ச ரூபாய் பெறுமதியுடைய சவூதி ரியால்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.