Loading...
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அரசாங்கத்திடமும் இந்தியா உள்ளிட்ட பல பல நாடுகளிடமும் பிரேரணை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Loading...
13வது திருத்தச் சட்டம் மற்றும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு பல தமிழ் கட்சிகள் கடந்த 21ஆம் திகதி மூன்றாவது நாளாகவும் கூடின.
வெள்ளவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
Loading...