இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ,180 நாட்கள் கடன் அடிப்படையில் சிங்கப்பூர் விநியோக நிறுவனம் மூலம் மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ளவுள்ளது.
இதற்மைய மசகு எண்ணெயுடனான ஆறு கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளன. 30 நாள் கடன் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இந்த விநியோகம் இடம்பெறவுள்ளது.
இந்த உடன்டிக்கைக்கு அமைய எரிபொருள் கப்பல் இலங்கை வரவுள்ளது. இதில் முதலாவது தொகை அடுத்த மாதம் 23ஆம் திகதி அல்லது 24ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அந்நிய செலவணி தொடர்பில் நெருக்டியை எதிர்கொண்டுள்ள வேளையில், எரிபொருள் இறக்குமதிக்கு பணத்தை தேடுவது பிரச்சனையாக உள்ளது.
ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 36 கோடி டொலர்கள் செலவாகிறது. நாட்டின் அந்நியசெலாவணி இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்தள்ளது. இதற்கமைவாக அடுத்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் எரிபொருளை தொடர்ச்சியான விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படாமல் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.