குடியேற்றம் தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவு தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை.
’விஜய்61’ படத்துக்காக அட்லியுடன் இரண்டாவது முறையாகக் கைகோர்த்துள்ளார் விஜய்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ட்ரம்ப்பின் அறிப்விப்புக்குப் பின்னர் அந்த திட்டத்தை மாற்றி இங்கிலாந்துக்கு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவிலேயே படமாக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தை மாற்றுவது குறித்து படக்குழுவினர் இன்னும் முடிவெடுக்கவில்லை. கமல் நடிப்பில் உருவாகிவரும் சபாஷ் நாயுடு படத்தில் முதல் ஷெட்யூலை அமெரிக்காவில் முடித்துள்ள படக்குழு, இரண்டாவது ஷெட்யூலுக்கு அமெரிக்காவுக்கு செல்லுமா என்பதும் கேள்விக்குறிதான்.