கிளிநொச்சி பூநகாி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கௌதாாிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் யாழ்.ஆனைக்கோட்டையை சோ்ந்த இளைஞா் ஒருவா் கூாிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 3.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பூநகாி கௌதாாி முனைக்கு ஆனைக்கோட்டையிலிருந்து 17 போ் கொண்ட குழு சுற்றுலா சென்றுள்ளது.
இதேபோல் குருநகாில் இருந்து படகு மூலம் மற்றொரு குழு அங்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் இரு குழுக்களுக்கிடையிலும் உருவான வாய்த்தா்க்கம் பின்னா் மோதலாக மாறியது.
ஆனைக்கோட்டை குழுவினர் மதுபோதையில் கடல் விளையாட்டில் ஈடுபட்டதாகவும், அருகில் குளித்துக் கொண்டிருந்த குருநகர் குழுவினர் இடையூறாக இருப்பதாக கூறி அதை நிறுத்துமாறு கூறியுள்ளனர். எனினும், தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட்ட ஆனைக்கோட்டை இளைஞன் ஒருவரை, குருநகர் பகுதியை சேர்ந்த 42 வயதானவர் கத்தியால் குத்திள்ளார்.
ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை சோ்ந்த ரஞ்சன் நிரோசன் (22) என்ற இளைஞன் கூாிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் உயிாிழந்துள்ளாா்.
சம்பவத்தையடுத்து குருநகாிலிருந்து படகு மூலம் அங்கு வந்திருந்த குழு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றிரவு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவபால சுப்பிரமணியம் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், வைத்தியசாலைக்கு சென்று சடலத்தையும் பாா்வையிட்டுள்ளாா். சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பூநகாி பொலிஸாா் மேற்கொண்டிருக்கின்றனா்.
இதேவேளை, இந்த மோதல் வேறு ஒரு காரணத்தை அடிப்படையாக வைத்து ‘உருவாக்கப்பட்டதா’ என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.