நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 40ற்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் சுமார் 10 மில்லியன் ரூபாவை நீர் வளங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்தி நீரைப் பெற்றுக் கொள்ளத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் நீர்வள சபைக்கு அதிக தொகையை செலுத்த தவறியுள்ளார். செலுத்தாத தொகை 1.8 மில்லியன். இதேவேளை, நீரைப் பெற்றுக் கொள்வதற்காக 45,000 ரூபாவை நீர்வள சபைக்கு செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஒருவர், குடிநீர்க் கட்டணத்தைச் செலுத்தாதவர்களில் இரண்டு முன்னாள் அமைச்சர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லம் தற்போது அமைச்சரவை அமைச்சர் ஒருவரால் பயன்படுத்தப்படுகிறது. முன்னாள் அமைச்சரின் நிலுவைத் தொகை தொடர்பில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருக்கு அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara) தெரிவித்தார்.