இங்கிலாந்தில் உள்ள Aldi என்ற கடையில் தக்காளி ஜூஸ் வாங்கி குடித்த பெண்மணிக்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது.
Aldi என்ற கடையில் Mrs.Smith என்பவர் தக்காளி ஜூஸ் ஆர்டர் செய்துள்ளார். அதன்படியே, டின்னில் அடைத்துவைக்கப்பட்ட ஜூஸை திறந்துபார்த்தபோது, இரத்த நிறத்தில் மங்கலாக இருந்துள்ளது.
இதனைப்பார்த்த இவருக்கு அருவருப்பாக இருந்துள்ளது. உடனே அந்த ஜூஸை கீழே சிறிது கொட்டிப்பார்த்தபோது, அடியில் இரண்டு கண்கள் மற்றும் இரண்டு கால்களுடன் இரத்த நிறத்தில் குழந்தையின் கரு இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த இவர், இதுகுறித்து அந்த நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். ஜூஸ் டப்பாவினை அந்த கடை ஊழியர்கள் சோதனை செய்ததில், அது இறந்துபோன தவளையின் உடல் என கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கடை நிர்வாகம் மன்னிப்பு கோரி கடிதம் ஒன்றினை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், 10 யூரோ மதிப்புள்ள Gift Voucher- ஐயும் அனுப்பி வைத்துள்ளனர்.