தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய நோய்களின் தாக்கங்கள் ஏற்படுகிறது, அதற்கு ஆரோக்கியமற்ற உணவு முறைகள் தான் காரணம்.
ஆனால் அந்த வகை நோய்களில் மூக்கில் ரத்தம் வடிவது போன்ற பிரச்சனை ஏற்பட்டால் அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
எனவே நமது மூக்கில் ரத்தம் வடிவதற்கு என்ன காரணம் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
மூக்கில் ரத்தம் வடிவதற்கு என்ன காரணம்?
நமது மூக்கில் இரு நாசித் துவாரங்களைப் பிரிக்கும் செப்டம் என்ற இடத்தில் இருந்து தான் ரத்தம் ஏற்படுகிறது.
இதற்கு முக்கியமாக இருப்பது சைனஸ் தொற்று, கடுமையான சளி, மூக்கடைப்பு பிரச்சனைக்கு பயன்படுத்தும் ஸ்ப்ரே போன்ற மருந்துகளின் அளவுக்கு அதிகமான உபயோகம்.
மேலும் லுகேமியா, ஈரல் நோய்கள், ஹீமோபிலியா மற்றும் மரபுவழி ரத்தக்கட்டுக் குறைபாடுகள் மற்றும் மூக்கில் உள்பக்கமாகச் சுரண்டி மூக்கின் உள்சுவர்களை அழிப்பதால் ஏற்படும் காயம் இது போன்ற அனைத்து காரணங்கள் மூலமாகவும் நமது மூக்கில் ரத்தம் வடிதல் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மூக்கில் ரத்தம் வடிவதைத் தடுப்பது எப்படி?
- அன்றாடம் நமது உணவில் புளிப்புச்சுவை உள்ள பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த உணவில் உள்ள ப்ளேவோனாய்டுகள் ரத்தக் குழாய்களின் உடைப்பிலிருந்து பாதுகாத்து ரத்தம் வடிவதை தடுக்கிறது.
- நமது மூக்கின் இரு துவாரங்களையும் ஒருமுறை பிடித்து, முன்பக்கம் சாய்ந்தாற் போல அமர்ந்துக் கொண்டு 5 முதல் 10 நிமிடம் வரை தலையை பின்பக்கமாக சாய்க்காமல் அப்படியே இருக்க வேண்டும்.