Loading...
திருகோணமலை-தோப்பூர் நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சடலம் இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளது.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர்க் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 56வயதுடைய பொடி அப்புக்காமி விஜயதாச என்பவர் கடந்த மூன்று தினங்களாகக் காணாமல் போயிருந்தார்.
Loading...
இவரைப் பலரும் தேடி வந்த நிலையில் இன்று காலை நல்லூர் ஆற்றங்கரை வீதியில் அமைந்துள்ள பழைய வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அவதானித்த பொதுமக்கள் சம்பூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Loading...