தமிழ்நாட்டில் சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை, இந்த கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாய் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜசேதுபதி. இவர் 2015ம் ஆண்டு தனது 8 வயது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அக்குழந்தை இந்த கொடுமையை தனது பள்ளி அசிரியரிடம் தெரிவித்ததையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மையம் மூலமாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
விசாரணையில், ராஜசேதுபதி குழந்தையை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதும், இதற்கு அவரது மனைவி இந்திரா உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ சேதுபதிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தார்.
மேலும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்த தாய் இந்திராவுக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், குற்றத்தை மறைத்ததற்காக 6 மாத தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.