நாடாளுமன்ற கூட்டத்தின் போது நேற்று (செவ்வாய்கிழமை) மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் இ அகமது (78) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று பகல் சுமார் 2 மணியளவில் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை (புதன்கிழமை) 2 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இணை அமைச்சராக பணியாற்றியதோடு இ அகமது பணியாற்றியதோடு, இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும் ஆவார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகிய நிலையில்,இரு அவைகளும் கூடியிருந்தது. இதனைத் தொடர்ந்து, இரு அவைகளுக்கும் பொதுவாக பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்திய வேளையில், இ அகமதுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.