கென்யாவில் 10 வயது பள்ளிச்சிறுமியை ஆசிரியர் ஒருவர் அடித்துள்ளதால் அச்சிறுமி இறந்துபோனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவில் உள்ள Mukandamia Primary பள்ளியில் படித்து வந்த Joy Wangari(10) என்ற சிறுமி பயின்று வந்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற அன்று, பாடப்புத்தகத்தை எடுத்து வாசித்து காட்டுமாறு வகுப்பு ஆசிரியர் இவரிடம் கூறியுள்ளார், ஆனால் இச்சிறுமிக்கு வாசிக்க தெரியவில்லை.
இதனால் கோபம் அடைந்த ஆசிரியர் பிரம்பால் பயங்கரமாக அடித்துள்ளார். இவரை அடிப்பதை சக மாணவர்கள் கைதட்டி ஆரவாரப்படுத்தியுள்ளனர்.
ஆசிரியர் தாக்கியதால், சிறுமியின் உடல்நலம் பாதிப்படைந்துள்ளது. வீட்டுக்கு சென்ற சிறுமி தனது வயிறு மிகவும் வலிக்கிறது என கூறியுள்ளார்.
4 நாட்களாக வலியால் அவதிப்பட்டு வந்த சிறுமியை அவரது பாட்டியால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
சிறுமியின் உடலில் ஏற்பட்ட உள்காயத்தின் காரணமாக அவர் 4வது நாள் இறந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். பள்ளி மாணவர்கள் மீது வன்முறை மேற்கொள்வது இது ஒன்றும் முதல் முறையல்ல.
இந்த பள்ளியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் மாணவர்களிடம் நடந்துகொள்கிறார்கள்.
இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட பள்ளி நிர்வாகம், எங்கள் பள்ளியில் வன்முறைக்கு ஒருபோதும் இடம் கிடையாது. உங்கள் மகளின் மரணத்திற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர் தான் காரணம் என்றால் அதற்கு நாங்கள் தக்க நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார்.