மனிதனின் உடலானது பல உறுப்புகளின் செயல்பாட்டால் தான் இயங்குகிறது, அதிலும் சில உறுப்புகள் மிக முக்கியமானவை.
சிறுநீரகம் அந்த வகையான மிக முக்கிய உறுப்பாகும். சிறுநீரக கோளாறு பிரச்சனையால் உலகளவில் பல்வேறு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கீழே உள்ள அறிகுறிகள் தென்பட்டால் அது சிறுநீரக பிரச்சனையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
உடல் சோர்வு
சரியாக தூங்கவில்லை, சாப்பிடவில்லை என்றால் பலருக்கு உடல் சோர்வு ஏற்படும், அது பிரச்சனையில்லை.
ஆனால் காரணமே இல்லாமல் நாள் முழுவதும் உடல் சோர்வாக இருந்தால் சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என அர்த்தமாகும்.
உடல் அரிப்பு
இரத்த ஓட்டத்தில் இருக்கும் கழிவுகளை சிறுநீரகம் தான் சுத்தம் செய்கிறது.
சிறுநீரகத்தில் பிரச்சனையிருந்தால் இது தடைப்பட்டு உடல் முழுவதும் அரிப்பு அதிலும் முக்கியமாக முதுகில் அதிகளவு அரிப்பு ஏற்ப்படும்.
கடுமையான ஜலதோஷம்
ஜலதோஷம் என்பது மனிதனுக்கு இயற்கையானது தான் என்றாலும், வெப்பமான இடத்தில் இருந்த போதும், மற்றவர்கள் நார்மலாக இருக்க நமக்கு மட்டும் தாங்கமுடியாத ஜலதோஷம் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சிறுநீரில் பிரச்சனை
சிறுநீர் கழிக்கும் போது அதனுடன் சேர்ந்து இரத்தம் வந்தாலோ, சிறுநீரின் நிறத்தில் அதிக மாறுதல் தெரிந்தாலோ, சிறுநீர் போகும் போது வலி ஏற்பட்டாலோ நிச்சயம் சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது என அர்த்தம். உடனே மருத்துவரை அணுகுவது நலம் தரும்.
தொடர் வாந்தி
சிறுநீரகத்தில் கோளாறு இருப்பவர்களுக்கு எதை சாப்பிட்டாலும் வாந்தி வரும். சாதாரணமாகவே வாந்தி வருவது போன்ற ஒரு குமட்டல் உணவு இருந்து கொண்டே இருக்கும்.
வலி
முதுகுக்கு கீழ் தான் சிறுநீரகம் உள்ளது. அதனால் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டால் அந்த இடத்தில் தாங்க முடியாத வலி உண்டாகும். அது முதுகு வலி என உதாசீனப்படுத்தாமல் மருத்துவரிடம் உடனே செல்ல வேண்டும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
மிக அதிகளவில் சிறுநீரானது தொடர்ந்து வந்தால் அதுவும் இரவு நேரத்தில் கணக்கில்லாத வகையில் சிறுநீர் அடிக்கடி வந்தால் சந்தேகமேயில்லாமல் சிறுநீரகத்தில் பெரிய கோளாறு உள்ளதாக அர்த்தமாகும்.