ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் அமெரிக்காவினுள் நுழைவதற்கு ட்ரம்ப் தடைவிதித்ததை அடுத்து தனது பதவி விலகலை தொடர்ந்து முதன் முறையாக மௌனம் கலைத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா.
குடியேற்றவாசிகள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் தலைத்தூக்கியுள்ள நிலையில், ட்ரம்பின் இத்தடை குறித்து ஒபாமா, எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
தனது பதவி விலகலுக்கு முன்னர் ஒபாமா, அமெரிக்க ஜனநாயகத்தில் ஒரு குடிமகனின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பலமுறை வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், பொதுவான அமெரிக்க மதிப்புகளுக்கு முரணாக செயற்படும் ட்ரம்பிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை வரவேற்கத்தக்கது என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
இதவேளை, சட்டசபை அரசியலமைப்பு உரிமை மற்றும் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பேச்சாளர் கெவின் லெவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஒபாமா கடந்த ஜனவரி 20ஆம் திகதி பதவியில் இருந்து உத்தியோகப்பூர்வமாக விலகியதை அடுத்து அவர் வெளியிட்ட முதல் அறிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.