ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டு வர அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக விவாதிப்பதற்காக அந்த நாட்டு பாராளுமன்றம் கூடியது.
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டு வர அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக விவாதிப்பதற்காக அந்த நாட்டு பாராளுமன்றம் கூடியது. எம்.பி.க்களின் காரசார விவாதம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.
அப்போது பாலின சமத்துவம் குறித்த அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு எம்.பி. ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து பேசியதால் அவையில் அமளி ஏற்பட்டது. இதனால் சபாநாயகர் அந்த எம்.பி.யை அவையில் இருந்து வெளியேறுமாறு கூறினார்.
ஆனால் அந்த எம்.பி. அதை ஏற்க மறுத்ததோடு மட்டுமில்லாமல், சபாநாயகரை தாக்க முயன்றார். இதையடுத்து சபாநாயகருக்கு ஆதரவான எம்.பி.க்கள் அவரை தடுக்க முயன்றபோது கை கலப்பு உருவானது. இதை தொடர்ந்து இருதரப்பு எம்.பி.க்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் அவையில் பதற்றம் உருவானது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஒருவரையொருவர் தாக்கி கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.