Loading...
ஒரு மனிதன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று தண்ணீர்.
அத்தகைய நீரானது, தாகத்திற்கு மட்டுமில்லாமல் நமது உடம்பில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
Loading...
எனவே அன்றாடம் நாம் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சுடுநீரை குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.
காலையில் வெறும்வயிற்றில் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- தண்ணீரை வெதுவெதுப்பான நிலையில் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சிறுநீர் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் வராமல் தடுக்கிறது.
- மாதவிடாய் காலங்களில் பெண்கள் தாங்க முடியாத வயிற்று வலியினால் அவதிப்படுகிறார்கள். அந்த நேரங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வயிற்று வலி விரைவில் குறைவதைக் காணலாம்.
- கடும் குளிர் காலத்தில் நமது மூக்கடைப்பு மற்றும் தொண்டைவலி தொடர்பாக ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் சுடுநீரைக் குடிப்பது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
- வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைக் கலந்துக் குடித்து வந்தால், நமது உடலின் வெப்பநிலை உயர்ந்து, வியர்வையாக வெளியேறுகிறது. இதனால் நமது உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் நிறைந்த கிருமிகள் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக்கப்படுகிறது.
- பெண்கள் மற்றும் ஆண்களின் அழகை கெடுக்கும் வகையில் உள்ள பருக்களை உருவாக்காமல் தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. எனவே தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வருவது மிகவும் நல்லது.
- நமது உடலின் சீரற்ற ரத்த ஓட்டத்தினால் பல்வேறு உடல் நலக் குறைவுகள் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சனைகளை தடுப்பதற்கு, காலையில் வெறும்வயிற்றில் சுடுநீரை குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நிலையில் சுடுநீரை குடித்து வந்தால், அது நமது உடம்பில் குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
- நமது உடலில் தேங்கியுள்ள கெட்டக் கொழுப்புக்களைக் கரைத்து, அதிகப்படியான உடல் எடையைக் குறைக்கிறது. எனவே அதற்கு, நாம் தினமும் காலையில் மிதமான சுடுநீரைக் குடித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
Loading...