அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலா பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தவர்கள் பலர் மற்றும் அடிமட்ட அதிமுக தொண்டர்கள் ஆகியோருக்கு இது பிடிக்கவில்லை.
இவர்களில் பலர் ஜெயலலிதாவின் இரத்த சொந்தம் தீபா தான் அதிமுகவின் உண்மையான வாரிசு என கூறிவருகிறார்கள். இந்நிலையில் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கட்சியில் இருக்கும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ மலரவன் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ஜெ. தீபா பேரவை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சசிகலா அதிமுக-வின் பொது செயலாளராக பெறுப்பேற்றது திட்டமிட்ட சதி என கூறினார். மேலும், வேலைக்காரி சசிகலா ஜெயலலிதாவை கொன்று விட்டு, நான் தான் பொதுச் செயலாளர் என சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என காட்டமாக பேசியுள்ளார்.