காலம் தாழ்த்தா தீர்கள். முதலமைச்சராகும் முயற்சியை எடுங்கள்” என அமைதியாக இருக்கும் சசிகலாவிடம் வலியுறுத்தியிருக்கிறார்களாம், கார்டனில் தற்போது கோலோச்சும் புதிய ஜோதிடர்கள்.
நடராஜன் மூலமாக சசிகலாவிடம் அண்மைக் காலத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட புதிய ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள (ஈ.சி.ஆர்.) ஒரு பங்களாவில் கடந்த 23-ந் தேதி இரவு சில பூஜைகள் செய்யப்பட்டன.
ஜனவரி 29-ந் தேதி நல்ல நாள். வளர்பிறையாகவும் இருப்பதால் அதிகார பதவியில் உட்கார்வது சிறந்தது’ என சொல்லியிருக்கின்றனர் ஜோதிடர்கள். ஆனால் சசிகலாவோ, எந்த ரியாக்ஷனையும் அப்போது காட்டவில்லை.
ஜல்லிக்கட்டு விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஓ.பி.எஸ்.சின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிப்பதில் கவனம் செலுத்தியபடி இருந்த சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கு இருப்பதை ஜோதிடர்களிடம் நினைவுபடுத்த, தீர்ப்பு வரும்போது வரட்டும். இப்போ, உங்களுக்கு கால கிரகங்கள் உச்சத்தில் இருக்கிறது. அதிகாரத்தில் உட்கார யோகம் அதிகமாக இருக்கு. யோசியுங்கள்’ என சொல்லியிருக்கிறார்கள் ஜோதிடர்கள்.
26-ந் தேதி இரவு சசிகலாவிடம் நீண்ட விவாதத்தை நடத்தியிருக்கிறார்கள் நடராஜனும் திவாகரனும். இது குறித்து நாம் விசாரித்தபோது,
சொத்துக் குவிப்பு வழக்கில் க்ளீன் ஹேண்ட் என தெரிந்த பிறகு பதவிக்கு வருவதுதான் சரியாக இருக்கும் என நடராஜனுக்கும் திவாகரனுக்கும் பதில் சொல்லியிருக்கிறார் சசிகலா.
ஆனால், அவர்களோ, நாம் அமைதியாக இருக்க… இருக்க பன்னீருக்கு மவுசு கூடிக்கொண்டே போகிறது. ஜெயலலிதாவின் நாற்காலியில் உட்கார மாட்டேன்; அதில் உட்காரும் தகுதி சின்னம்மாவுக்கு மட்டும்தான் இருக் கிறது’ என சொல்லிவந்த பன்னீர், சட்டமன்றத்தில் ஜெயலலிதா உட்கார்ந்த நாற்காலியில் உட்காருகிறார். குடியரசு தினத்தில் மனைவி யோடு சந்தோஷமா மேடையேறியிருக்கிறார் பன்னீர்.
இன்னும் ஒரு 3 மாசம் இப்படியே போனால் மக்களிடமும் அரசியலிலும் நல்லபேர் எடுத்து விடுவார். அப்படிப்பட்ட சூழலில், அவரை விலகச்சொன்னால், நம் மீதுதான் தேவையில்லாத விமர்சனங்கள் வரும்’ என்கிற ரீதியில் நீண்ட நேரம் வலியுறுத்தியவர்கள், கடந்த சில நாட் களாக உங்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் நெருக்கமில்லாத மாதிரி தோற்றம் உருவாகுது.
இது எதிர்மறையா போகும்’ என்று உளவுத்துறையிலிருந்து தனக்கு கிடைத்த ரிப்போர்ட்டை திவாகரன் எடுத்துச் சொல்ல, அதன் பிறகுதான் 27-ந் தேதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து கட்சி தனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை காட்டினார் சசிகலா” என்று சுட்டிக்காட்டினார்கள்.
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சசிகலா சந்தித்துப் பேசியதையடுத்து மீண்டும் மீண்டும் நடந்த விவாதத்தில், சசிகலாவை சம்மதிக்க வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, “மும்பையில் இருக்கும் கவர்னரின் புரோக்கிராம் என்ன? 29-ந் தேதி சென்னையில் அவர் இருக்கிறாரா?’ என ராஜ்பவனிலுள்ள அதிகாரிகளிடம் 27-ந் தேதி இரவு கேட்டது கார்டன்.
அதற்கு, பெப்ரவரி 4-ந் தேதி சென்னைக்கு வரும் கவர்னர், 5-ந் தேதி காலையில் கோவைக்கு செல்வதுடன் 5, 6, 7 தேதிகளில் அங்கேயே இருக்க திட்டம்.
7-ந் தேதி மாலை அல்லது இரவு சென்னை திரும்புவார்’ என்கிற தகவலை விவரித்துள்ளது ராஜ்பவன். இந்த தகவலை அடுத்து, கவர்னர் 4-ந் தேதி சென்னைக்கு வரட்டும். அதன் பிறகு முடிவு எடுக்கலாம் என சசிகலா சொல்ல… நடராஜனும் திவாகரனும் அமைதியாகியிருக்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்பட உயரதிகாரிகள் பலர் கடந்த 6 மாதங்களில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்கள்.
ஏற்கனவே காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலிருப்பதால் பணிகள் தேக்கமடைந்து வரும் நிலையில், உயரதிகாரிகள் ஓய்வு பெறுவதால் உருவாகும் பணியிடங்களையும் கூடுதல் பொறுப்பாக மற்ற உயரதிகாரிகள் பார்க்கும் சூழல். ஒன்றுக்கு மேற்பட்ட பொறுப்புகளில் உள்ள உயரதிகாரிகள், கூடுதல் பொறுப்புகளை குறையுங்கள் என தொடர்ந்து வற்புறுத்தியதால் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் 10-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு தனிஅதிகாரிகளை நியமிக்கவுமான ஒரு லிஸ்ட் தயாரிக்கப்பட்டும் அது வெளியாகவில்லை.
சசிகலா முதல்வரானதும் என்னென்ன மாற்றங்கள் செய்யணுமோ எல்லாத்தையும் அப்போ பண்ணிக்கலாம்னு தடை போட்டு வைத்துள்ளது கார்டன்.
சென்னைக்கு கவர்னர் வந்ததும் அவருடன் நடக்கும் ஆலோசனையை அடுத்து பதவியேற்புக்கான வேகம் அதிகரிக்கும் என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.
சசிகலா முதல்வர் பொறுப்பேற்றதும் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு அந்த இடத்தில் தனது நண்பரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பன்னீர்செல்வத்தை கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார் நடராஜன்.