சிறீலங்காவில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹொலன்ட் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பிரான்ஸ் அதிபர் புத்தாண்டு வரவேற்பு விருந்துபசாரம் அளித்தார்.
இந்நிகழ்வில் பிரான்சுக்கான சிறீலங்காத் தூதுவர் திலக் ரணவிராஜாவும் பங்கேற்றிருந்தார். இவர் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சார்பில் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட மீன் ஏற்றுமதித் தடையை நீக்குவதற்கும், ஜிஎஸ்பி. வரிச்சலுகையை சிறீலங்கா மீண்டும் பெறுவதற்கு பிரான்ஸ் அளித்துவரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதன்போது, சிறீலங்காவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை பிரெஞ்சு அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அனைத்துலக சமூகத்துடன் சிறீலங்கா மீண்டும் தொடர்புகளை வலுப்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.