பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றைய தினம் சஞ்சிவ் வெளியேறிய நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை வரவேற்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சிவ் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றார். இவரது தனித்தன்மை அதிகமாகவே இருந்தது. யாருடனும் கூட்டணி இல்லாமல் தன்னிச்சையாகவும், தவறுகளை சரியான நேரத்தில் சுட்டிக்காட்டிய இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் நேற்று இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவரை சர்ப்ரைஸாக வரவேற்றுள்ளனர் இவரது குடும்பத்தினர். அதிலும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த மகள் தனது தந்தையை பெரியவர் போன்ற ஆறுதல் படுத்திய காட்சி அனைவரையும் கலங்க வைத்தது.
இதே போன்று நேற்றும் தந்தையை முதல் ஆளாக அவரது மகள் வரவேற்றுள்ள காட்சியினை இங்கு காணலாம்.
A post shared by Preethi Sanjiv (@preethisanjiv)