தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிய ரகானே – புஜாரா ஜோடி மீது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ப்ளேயிங் 11ல் பெரும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டது.
வழக்கமாக சொதப்பும் சீனியர் வீரர்கள் அஜிங்கியா ரகானே, புஜாரா ஆகியோரை நீக்கிவிட்டு வாய்ப்புகாக காத்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
குறிப்பாக புஜாரா கடந்த முதல் டெஸ்டில் டக் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் இருவர் மீதும் நம்பிக்கை வைத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர்களை இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார்.
தேர்வுக்குழுவின் எதிர்பையும் மீறி சண்டை போட்டு டிராவிட் அவர்களை அணிக்குள் கொண்டு வந்தார் ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாத இருவரும் மீண்டும் சொதப்பினர்.
அதன்படி சட்டீஸ்வர் புஜாரா 3 ரன்களுக்கும், அஜிங்கியா ரகானே டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து நடையை கட்டினர்.
இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் அவசர அவசரமாக ராகுல் டிராவிட் மீட்டிங் போட்டுள்ளதாகவும், அதில் விட்டு விளாச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.