ராஷ்மிகா மந்தனாவின் கல்லூரி பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
அதனையடுத்து இவர் தற்போது தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு மற்ற மொழிகளை விட தமிழில் தான் ரசிகர்கள் அதிகம் என்பதால் தமிழில் எப்போது நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
A post shared by RASHMIKA.MANDANA.FANPAGE (@rashmika_mandana_fancl)
சமீபத்தில் இவரது நடிப்பில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா’ திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கல்லூரி பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.