உலகில் 5 பேருக்கு மாத்திரமே காணப்பட்ட விசித்திர தோல் நோய், பங்களாதேஷில் உள்ள சிறுமி ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்களாதேஷின் வட பகுதியில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியான சஹானா, இ.வி என அழைக்கப்படும் எபிடெர்மோடிஸ்பிலேசியா வெரிசிபோர்மஸ் (epidermodysplasia verruciformis) எனும் அபூர்வ தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நோய் காரணமாக சிறுமியின் முகம், காது, நாடி மற்றும் மூக்கு உள்ளிட்ட உறுப்புகளில், மரம் போன்று சிறிய அளவில் சதை வளர்ந்து வருகின்றது.
குறித்த சிறுமியை பரிசோதனை செய்துள்ள டாக்கா வைத்தியசாலை வைத்தியர்கள் இது ஒரு அபூர்வ நோய் என்றும், உலகில் 6 பேருக்கே குறித்த நோய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 6 வயதில் தாயை இழந்த தனது மகளிற்கு வைத்தியர்கள் நல்ல சிகிச்சை ஒன்றை வழங்கி, அவளின் முக அழகை மீண்டும் பெற்று தருவார்கள், என தான் நம்புவதாக சஹானாவின் தந்தை முகமது ஷாஜகான் தெரிவித்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.