பொருளாதாரத்தை முன்னேற்றும் நாடுகளில் தொழிநுட்ப கல்வியும் பயிற்சியும் முக்கிய இடத்தை வகிக்கின்றதென தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அதனை கையாளக்கூடிய திறமை எமது இளைஞர்களுக்கும் ஏற்படவேண்டுமென தெரிவித்துள்ளார்.
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் தொழில்நுட்ப கல்விப்பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல்லை இன்று (வியாழக்கிழமை) நாட்டிவைத்த எதிர்க்கட்சித் தலைவர், அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொழிநுட்ப முன்னேற்றத்தின் ஊடாக பல இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்;கும் என்ற ரீதியில், புதிதாக அமைக்கப்படும் தொழிநுட்ப பயிற்சி நிலையம் இப்பிரதேச மக்களுக்கு பயனுள்ளதாக அமையுமென மேலும் தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், வலயக்கல்விப் பணிப்பாளர் என்.விஜேந்திரன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.