கார்த்திகை தேய்பிறை பிரதமை திதி முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் அனுஷ்டிக்கும் இந்த விரதத்தால் ‘தைரியம்’ அதிகரிக்கும். இந்த விரதத்தை ‘பிள்ளையார் நோன்பு’ என்பர்.
சதுர்த்தி விரதம்
ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் துவங்கி அடுத்த ஆண்டு புரட்டாசி சதுர்த்தி வரை ஒரு ஆண்டிற்கு தொடர்ந்து அனுஷ்டிப்பது சதுர்த்தி விரதம். இதனால் செய்யும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
வெள்ளிக்கிழமை விரதம்
வைகாசி வளர்பிறை வெள்ளிக்கிழமை துவங்கி, தொடர்ந்து 52 வெள்ளிக்கிழமைகளில் அனுஷ்டிக்கும் விரதம். இந்த விரதத்தால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.
சங்கடஹர சதுர்த்தி விரதம்
மாசி மாத தேய்பிறை சதுர்த்தி துவங்கி, ஒரு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாத தேய்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருப்பது. இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தினால் எப்படிப்பட்ட துன்பமும் விலகிவிடும்.
குமார சஷ்டி விரதம்
கார்த்திகை தேய்பிறை பிரதமை திதி முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் அனுஷ்டிக்கும் இந்த விரதத்தால் ‘தைரியம்’ அதிகரிக்கும். இந்த விரதத்தை ‘பிள்ளையார் நோன்பு’ என்பர்.
செவ்வாய் விரதம்
தை அல்லது ஆடி முதல் செவ்வாய் தொடங்கி, தொடர்ந்து 52 வாரங்கள் அனுஷ்டிக்கும் விரதம் ‘செவ்வாய் விரதம்.’ இந்த விரதத்தால் செல்வ வளம் பெருகும். இந்த விரதம் மேற்கொள்ளும் பெண்களுக்கு வசதியில்லாத நாட்களாக அமையுமானால் பின்வரும் வாரங்களில் கூட்டிக் கொள்ளலாம்.
தை வெள்ளி விரதம்
விநாயகரைக் குறித்து தை மாத வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் மட்டும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம். இதனால் செல்வ விருத்தியும், கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும்.