தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் ராஜபக்ச ஆட்சியின் புகழ் வீழ்ச்சி அடைந்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இதனைத் தெரிவித்த அவர், இது தற்காலிகமானது என்றும் இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“இரசாயன உரப் பாவனையை தடை செய்வதற்கு அரசு தலைவர் கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானம் ஒரு வலுவான முடிவு. ஆனால் பொறுப்பான அதிகாரிகளினால் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை.
2019ஆம் ஆண்டு பதவி ஏற்றவுடன் இரசாயனம் உரத்திற்கு மாறுவதற்கான தனது முடிவை அரச தலைவர் அறிவித்தார். ஆனால் அதிகாரிகள் அதைத் தொடராத தன்மையால் முடிவே மாறியது.
இரசாயன உரத்துக்கு மாறுவதற்கான செயன்முறை உள்ளது என்பது உண்மை தான். அது 10 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த விடயம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அசண்டையீனம் செய்தமையால் அரச தலைவருக்கு கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிட்டது” என்றார்.