Loading...
பெரிய நாடான சீனாவிலிருந்து கொண்டு இலங்கைக்கு ஏன் அமைச்சர்கள் வந்துத் திரிகிறார்கள் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சீன அமைச்சர்களுக்கு அந்நாட்டில் வேலையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மாதத்துக்கு ஒருமுறை எவராவது சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகின்றார் எனவும் கூறினார். இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
Loading...
சீனாவின் வெளிவிவகார அமைச்சரை வரவேற்பதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் செல்லவில்லை. மாறாக விளையாட்டுத்துறை அமைச்சரே சென்றார். இதற்குக் காரணம் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களே. தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்காகவே சீனாவின் அமைச்சர்கள் இலங்கைக்கு வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
Loading...