Loading...
யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் கடற்படையினரின் படகு மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் கடந்த இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. படகு ஒன்றில் தனியாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாதகல் குசுமந்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க்கப்படுகின்றது.
Loading...
அதேசமயம் கடற்படையினரின் கண்காணிப்பு படகே குறித்த மீனவரின் படகு மீது மோதியதாகவும் மீனவர் பயன்படுத்திய படகு முற்றாக சேதம் அடைந்துள்ளதாகவும் மாதகல் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...