ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. இசை மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றிலும் அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஏ.ஆர்.ரஹமான் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘Le musk’.
மேலும் அவர் கதை எழுதி விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ’99 Songs’. இந்த இரண்டு திரைப்படங்களையும் ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை கனடா தலைநகர் டொரண்டோவில் உள்ள பிரபல நிறுவனமான ஐடியல் குழுமம் நிறுவனம் தொடங்குகிறது. இந்த நிறுவனத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இன்று டொரண்டோவில் துவக்கி வைக்கின்றார்.
இந்த நிறுவனம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:
நான் என்னுடைய திட்டங்கள் மூலம் எந்த விதமான நேயர்களை சென்றடைய விரும்புகிறேனோ அவர்கள் உணர்வுகளை உண்மையாக புரிந்து கொள்ளும் ஐடியல் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்பட எதிர்நோக்குகிறேன்.
ஐடியல் எண்டெர்டெய்ன்மெண்ட்டில் உள்ளவர்கள் வாழ்க்கையில் முன்னுக்கு வர எவ்வாறு கடினமாக உழைத்தார்கள் என்பதை தனிப்பட்ட முறையில் அறிந்தவன் நான். எனவே நான் இடும் கடின உழைப்பின் மதிப்பை அவர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள்.” என்று கூறினார்.
ஐடியல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷாஜி நாடா கூறுகையில், “ஒன்றுக்கொன்று தொடர்பில் உள்ள, நாம் வாழும் இன்றைய உலகில் நேயர்கள் புதிய படைப்புகளுக்கான வேட்கை மிக்கவர்கள்.
ஐடியல் எண்டெர்டெய்ன்மெண்ட் இத்தகைய படைப்பில் முன்னிலை வகிக்க விரும்புகிறது, இதற்காக, எல்லைகளை விஸ்தரிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.” என்றார்.