‘தனி ஒருவன்’ என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின்னர் மீண்டும் ஜெயம் ரவி, அரவிந்தசாமி இணைந்து நடித்துள்ள ‘போகன்’ திரைப்படம் நாளை வெளிவரவுள்ளது.
இந்த படத்தின் நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஜெயம் ரவியுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள ஹன்சிகா, இந்த படத்தில் தான் இதுவரை வாழ்க்கையில் செய்யாத தவறு ஒன்றை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தின் ஒரு முக்கிய காட்சிக்காக முதன்முதலாக சரக்கு அடித்ததாகவும், நீளமான இந்த காட்சியை படமாக்க பத்து தினங்கள் ஆனதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதுபோல் இந்த படத்தில் பல விளையாட்டுத்தனமான வேலைகள் செய்துள்ளதாகவும், அந்த காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாலிவுட்டில் நடிப்பதை விட தமிழில் நடிப்பதையே அதிகம் விரும்புவதாகவும், தமிழ் ரசிகர்கள் தன்னை தமிழ்ப்பெண்ணாகவே கருதுகின்றார்கள் என்றும் ஹன்சிகா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.