Loading...
நமது உடம்பின் அனைத்து செயல்பாட்டிற்கும் நீர்ச்சத்து மிகவும் அவசியமாகும்.
ஏனெனில் அது உடம்பில் ஏற்படும் உராய்வுத் தன்மையை தடுத்து, உடலின் பாகங்களை மென்மையாக செயல்படச் செய்கிறது.
Loading...
மேலும் தண்ணீரானது நமது உடம்பில் உள்ள நச்சுப் பொருட்களை சிறுநீர் மற்றும் வியர்வையின் வழியாக வெளியேற்றி, உடலை புத்துணர்ச்சியாக வைப்பதில் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.
எனவே அன்றாடம் நாம் தண்ணீரை நமது உடம்பிற்கு போதுமான அளவு குடிக்காவிட்டால், பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
குறைவான தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் அறிகுறிகள்
- ஒருவர் தனது உடம்பிற்கு தேவையான தண்ணீரைக் குடித்து வந்தால், அவர் ஒரு நாளைக்கு 6-7 முறைகள் சிறுநீர் கழிக்க நேரிடும். ஆனால் அவர்கள் 3 முறைக்கு குறைவாக சிறுநீர் கழித்தால், அவர்கள் அதிகமாக நீரை பருகுவது மிகவும் அவசியமாகும்.
- நமது உடம்பிற்கு தேவையான தண்ணீர் இல்லாவிட்டால், உடலில் வறட்சி ஏற்படுவதுடன் கடுமையான தாங்க முடியாத தலைவலியையும் ஏற்படுத்துகிறது.
- நம்முடைய சருமத்தில் ஏற்படும் வறட்சி, நாம் போதுமான தண்ணீரை குடிக்கவில்லை என்பதை தெரியப்படுத்தும். எனவே அதை தடுப்பதற்கு, அன்றாடம் போதுமான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.
- தினமும் நாம் சிறுநீர் கழிக்கும் போது, அது மஞ்சள் நிறத்தில் வெளியேறினால், கூட நாம் போதுமான தண்ணீரை எடுத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தமாகும்.
- நமது உடலில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பின், நமது வாய் உலர்ந்து, வறட்சி தன்மை அடைந்து, தொண்டை வலியை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
- நமது உடலில் போதுமான திரவம் இல்லை என்றால், அடிக்கடி மயக்கம், தலைச்சுற்றம் இது போன்ற பல அறிகுறிகளை ஏற்படுத்தும். இதற்கு நாம் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும்.
- நமது உடலில் பற்றாக்குறையான தண்ணீர் இருந்தால், கடுமையான நெஞ்செரிச்சல், அதிக பசி, பலவிதமான பதட்டம் மற்றும் குழப்பங்கள் ஏற்படுவதுடன், நமது உடம்பில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும்.
Loading...