மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘புலிமுருகன்’ படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்து மலையாள திரையுலகில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்நிலையில், மலையாள உலகில் பிரபல இயக்குனராக வலம் உன்னிகிருஷ்ணன் இயக்கும் புதிய படம் ஒன்றில் மோகன்லால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விஷாலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஹன்சிகா கைவசம் தமிழில் எந்தவொரு படங்களும் இல்லாத நிலையில், மலையாளத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி என்று கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.
இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’, சல்மான் கான் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.