திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக நினைவு இழந்து, மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக கடந்த டிசம்பர் 15-ம் திகதி இரவு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, டிச.23-ம் திகதி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.
தற்போது அவர் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின், அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
அவர் பெயரில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பாக, அத்தனை போராட்டங்கள் நடந்த போதும் அவர் எந்த கருத்தும் கூறவில்லை.
கை, கால், முதுகு, இடுப்பு, கழுத்து ஆகியவற்றில் என அவரது உடலில் ஏற்பட்ட கொப்பளங்கள், வயோதிகம் ஆகியவற்றில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொப்பளங்களை முழுமையாக போக்க அளிக்கும் மருந்துகளை ஏற்றுக்கொள்ளும் வலிமை அவரின் உடலுக்கு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்து விட்டதாக தெரிகிறது.
தற்போது அவருக்கு மறதி நோயும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரை முருகன், ராகுல் காந்தி, ரஜினி காந்த், வைரமுத்து, ஜெகத்ரட்சன் என யாரையும் அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
பழைய சம்பவங்களை அவருக்கு நினைவு படுத்தினால், அவருக்கு நினைவு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியிருப்பதால், அதற்கான முயற்சியில் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போது அவருக்கு, குழாய் வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் அவரால் பேச முடியாமலும் போனது.
அரிதாக சில நேரம் மட்டும் மு.க.ஸ்டாலின் மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை அவர் அடையாளம் கண்டு கொள்கிறாராம். சில சமயம் முகத்தில் புன்னகை மட்டும் பதிலாக வருகிறதாம்.
அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக கட்சி பிரமுகர்கள் உட்பட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், செயற்கை சுவாம் அளிக்க பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் அகற்றபப்ட்டுள்ளதாகவும், 3 நாட்களுக்கு முன்பு, மாடியில் உள்ள அவரது அறையிலிருந்து கீழ் தளத்திற்கு அவரை அழைத்து வந்தனர்.
அப்போது அவர் குடும்பத்தினரை பார்த்து புன்னகைத்தார் எனவும் திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
மேலும், அவர் உடல் நிலையில் எந்த குறையும் இல்லை. பேச்சு திறனும், ஞாபக சக்தியும் வந்து விட்டால், அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என அவர்கள் கூறி வருகிறார்கள்.