சாம்சங் நிறுவன டி.வி. மாடல்களில் எல்.ஜி. டிஸ்ப்ளே நிறுவனத்தின் ஒ.எல்.இ.டி. பேனல்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் டி.வி. மாடல்களில் எல்.ஜி. டிஸ்ப்ளே நிறுவனத்தின் ஒ.எல்.இ.டி. பேனல்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்.ஜி. எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் எல்.ஜி. டிஸ்ப்ளே சமீபத்தில் உருவாக்கும் சாதனங்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சி.இ.எஸ். 2022 நிகழ்வில் எல்.ஜி. டிஸ்ப்ளே புதுமை நிறைந்த அடுத்த தலைமுறை கியூ-எல்.இ.டி. மற்றும் ஒ.எல்.இ.டி. பேனல்களை அறிமுகம் செய்தது. எல்.ஜி. டிஸ்ப்ளே உருவாக்கிய டபிள்யூ-ஒ.எல்.இ.டி. பேனல்கள் கொண்ட சாம்சங் டி.வி. மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கென சாம்சங் நிறுவனம் எல்.ஜி. டிஸ்ப்ளேவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. மேலும் 2022 சி.இ.எஸ். நிகழ்வில் எல்.ஜி. டிஸ்ப்ளேவிடம் இருந்து ஒ.எல்.இ.டி. பேனல்களை வாங்குவது பற்றி சாம்சங் தலைமை செயல் அதிகாரி ஜாங் ஹீ வெளிப்படையாக தகவல் தெரிவித்து இருந்தார்.