Loading...
அம்பாறையில் கார் ஒன்று கனரக வாகனத்துடன் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை அம்பாறை கொழும்பு வீதியில் இடம் பெற்றுள்ளது.
கனரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading...
விபத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கல்முனை பிரதேசத்தை சேர்ந்த ஒன்றரை மாத ஆண் குழந்தை மற்றும் அவருடைய தந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்ளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Loading...