இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் என்பவர் அரியலூர் அருகே தலித் பெண் நந்தினியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து படுகொலை செய்திருக்கும் சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.
இதேவேளை நந்தினியின் பெண் உறுப்பை பிளேடால் அறுத்து 5 மாத சிசுவை வெளியே எடுத்து வீசிய கொடூரத்தையும் மணிகண்டன் செய்திருக்கிறார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
அரியலூரை அடுத்த செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவதி நந்தினி.
தந்தையை இழந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த நந்தினி சித்தாள் வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.
அப்போது கொத்தனார் வேலை செய்து வந்த இந்து முன்னணியின் ஒன்றிய செயலர் மணிகண்டன், நந்தினியை இடைவிடாமல் துரத்தி காதலித்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் நந்தினியும் உடன்பட இருவரும் காதலர்களாகி உள்ளனர்.
இதில் நந்தினி கர்ப்பமாகிவிட்டார். இதனால் தம்மை திருமணம் செய்து கொள்ளுமாறு மணிகண்டனை நந்தினி வற்புறுத்தி இருக்கிறார். மணிகண்டனோ மறுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29ஆம் திகதி அன்று நந்தினியை மணிகண்டன் கடத்திச் சென்றுள்ளார்.
கீழமாளிகை என்ற இடத்தில் நந்தினியை அடைத்து வைத்து நண்பர்களுடன் சேர்த்து கூட்டாக 4 நாட்களாக தொடர் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் நந்தினியை படுகொலை செய்து அவரது பெண்ணுறுப்பை பிளேடால் அறுத்து கர்ப்பப்பையில் இருந்த சிசுவை எடுத்து வீசிய கொடூரத்தை கொடூரன் செய்துள்ளான்.
டிசம்பர் 30ஆம் திகதி மகளை காணவில்லை என நந்தினியின் தாய் ராசக்கிளி, பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அப்போதே மணிகண்டன் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகர் மீது நந்தினி தரப்பில் பொலிசாரிடம் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொலிஸார் மணிகண்டன் கும்பலுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 14ஆம் திகதியன்று கீழமாளிகை அருகே கிணறு ஒன்றில் இருந்து நந்தினியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மணிகண்டனை பொலிசார் கைது செய்யவில்லை. மக்கள் போராட்டம் நடத்திய பின்னர்தான் மணிகண்டனையும் அவரது நண்பர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இருந்த போதும் நந்தினியை இப்படி படுகொலை செய்ய சொன்ன மூளையாக செயல்பட்ட இந்து முன்னணி மாவட்ட செயலர் ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனாலும் பொலிஸார் இந்து முன்னணி மாவட்ட செயலரை ராஜசேகரை காப்பாற்றுவதிலேயே குறியாக இருப்பது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான கொடூரன் குற்றவாளியாக இருப்பின் கொடுக்கப்படும் தண்டனைகளும் கொடூரமானதாக இருக்க வேண்டும்.
– See more at: http://www.manithan.com/news/20170202124758#sthash.iW570JCW.dpuf