Loading...
நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு கலாச்சாரங்களுக்கும் ஒவ்வொரு விதமான அறிவியல் விளக்கங்கள் உண்டு.
அதே போல தான் கார்த்திகை மாதத்தில் ஏன் தீபம் ஏற்றுகின்றோம் என்பதற்கும் ஒரு அறிவியல் விளக்கம் உள்ளது.
காத்திகையில் தீபம் ஏற்றுவதற்கு என்ன காரணம்?
தெருவிளக்குகள் மற்றும் மின்சாரம் இல்லாத நமது மூதாதையார் காலத்தில் இருந்து கார்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
ஏனெனில் கார்த்திகை மாதத்தில் பெய்யும் மழைக் காரணமாக, பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் நமது வீட்டின் ஓரங்களில் ஒதுங்க நினைக்கும்.
Loading...
எனவே நமது வீடுகள் முழுவதும் விளக்கினை ஏற்றி வைப்பதால், அவை வெளிச்சத்தை பார்த்து வராமல் இருக்கும்.
எனவே இந்த மாதிரியான விஷப்பூச்சிகளை தடுப்பதற்காக தான் கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றும் பழக்கம் நமது முன்னோர்களின் காலத்தில் இருந்து, தற்போது தொடர்ந்து கலாச்சாரமாக பின்பற்றி வருகின்றது.
Loading...